Posts

இளையோருக்கான இலவசப் பயிற்சி நெறிகள். - Youth empowerment in North.

Image
  சுயசிந்தனையும் நன்நெறிகளும் உள்ள மககளால் ஆன பொருளாதாரத்தன்னிறைவுள்ள மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குதல். 15/16 இலிருந்து 24 வயதுவரை ஒரு மனிதன் புதியவிடயங்களை கற்றலுக்கான உச்சத்திறனைப் பெற்றிருக்கிறான். எதிர்கால வாழ்கைக்குத்தேவையான கல்வி,தொழில்திறன்,வாழ்திறன்கள் உட்பட்ட சகல திறன்களையும் வளது;துக்கொள்ளவேண்டிய வயது இதுவே. புhடசாலையில் எமது நாட்டில் உள்ள பாடமாக்கலை மட்டும் அடிப்படையாகக்கொண்ட சிந்தனைத்திறன்-படைப்பாற்றல் போன்வற்றை வளர்க்காத கல்வி அனைவருக்கும் பொருத்தமானது அல்ல. மாணவர்கள் பல்வேறுபட்ட தனித்திறமைகளை உடையவர்களாக இருப்பர்.  எல்லோராலும் ஏட்டுக்கல்வியை மனனம் செய்ய முடிவதில்லை. சிலர் ஓவியம் வரைவதில் திறமை உள்ளவர்களாக இருப்பர், சிலர் பாட்டுப்பாடுவதில் சிறந்திருப்பர். சிலர் புகைபடம் எடுத்தல்,, மற்றும் சிலர் புதிய பொருட்களை உருவாக்குதல், கவிதை புனைதல், கட்டுரை எழுதல், தொழில் முயற்சிகளைச் சிந்தித்தல் என பல்வேறு துறைகளில் இயல்பாகவே விருப்பமும் தனித்திறமையும் உடையவர்களாக இருப்பர். இவ்வாறான தனித்திறமைகளை ஊக்குவித்தால்தான் உலகம் வியக்கும் சிறந்த மனிதர்களை நமது நாட்டிலும் உருவாக்கலாம்.  திற

போதைப்பொருள் பாவனையின் சடுதியான அதிகரிப்பும் - கற்றவர்களின் அசமந்தமும்.

Image
  Illicit Drug Addiction And Abuse உயிர் ஆபத்தான மற்றும் குறுகிய காலத்திலேயே அடிமைநிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் எனக்கொள்ளப்படும் கஞ்சா, ஐஸ்(Methamphetamine), ஹெரோயின், கொக்கெய்ன், என்பவற்றின் பாவனை வீதம் சுமார் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளையோரிடையே வடக்கில் அதிகரித்திருப்பதை புள்ளிவிபரங்கள் காட்டினும், பொது மக்கள் மத்தியில் அதிலும் நன்கு படித்த-பொருளாதார அடிப்படையில் மத்தியதர மற்றும் உயர்தர மக்கள் மத்தியில், சமூகம் எப்படிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு மிகக்குறைவாக உள்ளமை சமூகச்செயற்பாட்டளர்களிற்கு ஆழ்ந்த கவலையளிக்கிறது..

Research Assistants Wanted in Jaffna (Students of Psychology)

Image
Part-Time Volunteer Research Assistants  உளவியல் கற்கும் மாணவர்கள் ( சான்றிதழ்/டிப்ளோமா / பட்டப்படிப்பு எதுவாயினும்) அல்லது உளவியல் கற்றலில் ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் - எம்முடன் இணைந்து உளவியல் ஆய்வுப்பணியில் தொண்டர்களாகப் பணியாற்ற தேவை. நாம் வழங்கும் வினாக்கொத்துக்களை பூர்த்தி செய்தல், மக்களுடன் நேர்முகம் களைச் செய்தல் மூலம் தகவல் திரட்டுதல் , எம்முடனான இணைய வழிக் கலந்துரையாடல் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியன உங்கள் அடிப்படைப் பணியாகும். தொடர்ந்து கற்றலுக்கான செயற்பாடு இது. பகுதி நேரமாக , உங்கள் நேர வசதிப்படி மாதத்தில் ஒரு சில மணிநேரங்களை மட்டுமே ஒதுக்கி பணி புரியலாம். நீங்கள் உங்கள் இடத்தில் இருந்தே இணைய வழியில் எம்முடன் பணி புரியலாம். இது ஒரு கூட்டான கற்கும் முயற்சியாகும். உளவியல் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களிற்கு தாம் கற்றவற்றை ஆய்வுகள் மூலம் நினைவு படுத்தவும் அவர்களது அடுத்த கட்ட கல்விக்கு ( Bachelor's/ Master's) தேவையான அடிப்படைகளைப் பெறவும், அந்தந்த துறையில் உள்ள தொழில் வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும், தொழில் வழங்குனர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப

உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?

Image
  உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ? சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும். இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..)

சத்த ஒவ்வாமை - Misophonia

Image
  குழந்தை கத்தியதால் தந்தை தற்கொலை. உண்மைச் சம்பவம் தனது 3 வயதுக்குழந்தை அழுத காரணத்தால் கம்பியூட்டர் பொறியியலாளரான தந்தை (35) தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளார். இந்த வாரம் - கொழும்பில் உள்ள ஒரு இளம் தமிழ்க்குடும்பத்தில் நடந்தது இது. நம்ப முடிகிறதா ? குழந்தை கத்திய சாதாரண சத்தத்திற்கு த்றகொலை செய்வதா ? அப்படி யாரேனும் செய்வார்களா ? ஆம் - வேண்டத்தகாத ஒரு சத்தம் வெகுநாளாக உள்ளத்தினுள்ளே உறங்கிக்கொண்டிருந்த வெடிகுண்டு (time bomb)ஒன்றின் திரியைப் பற்ற வைக்கலாம். Misophonia எனப்படும் ஒலிக்கு – அதீத எதிர்வினை ஆற்றும் உளநலக்கோளாறு எம்மில் பலரில் அவர்கள் அறியாமலே காணப்படலாம். குறிப்பிட்ட சில சாதாரண ஒலிகள் கூட (ஒருவர் உணவுண்ணும் சத்தம், நாய் குரைத்தல், தெருவில் வாகனங்களின் ஹோர்ன், வாகன இரைச்சல், குறித்த சில நபர்களின் அதிக சத்தமான உரையாடல் ..)ஒரு நபரில் உள,உணர்வு ரீதியான, உடலியல் ரீதியான (psychological, emotinal, physiological..)உடனடிப்பாதிப்புக்களை ஏற்படுத்தலாம். அந்த சமயத்தில் அவர்கள் எதிர்வினையாற்றுவது எதிர்பார்க்கவே முடியாத அளவில் கடுமையானதாக இருக்கலம்(they may get panic attacks too). ஒ

காரணம் தெரியாத மனச் சோர்வா? உடனடியாக நீக்க - சிறிய வழிமுறைகள்.!

Image
காரணம் தெரியாத மனச் சோர்வா? உற்சாகம் இல்லாதது போலவும் வாழ்வே வெறுமையாக உள்ளதுபோலவும் திடீரென உணர்கிறீர்களா?(feeling low/ feeling down), சில நிமிடங்களை ஒதுக்கி பின்வரும் முறைகளை கடைப்பிடித்துப் பாருங்கள்: 1)இதுவரை உங்கள் வாழ்வில் நீங்கள் அடைந்த மகிழ்ச்சியான சம்பவங்கள், வெற்றிகள், மகிழ்ச்சி தந்த வசதி வாய்ப்புக்கள் என்பவற்றை ஒரு பேப்பரில் சுருக்கமாக எழுதுங்கள் ( உதா: எனது மகன் பிறந்த வேளை, பல்கலை அனுமதிக்கடிதம் வந்த நாள், காதலி ஓ.கே சொன்ன நேரம், முறை ) எழுதும்போது அவற்றை மனதில் இரைமீட்டுக் கொள்ளுங்கள். அப்போது அடைந்த அந்த சந்தோசத்தை நினைத்துப்பாருங்கள். எவ்வளவு அதிகமன சம்பவங்களை நினைக்கிறீர்களோ அவ்வளவு நன்று. இந்த செயற்பாட்டுக்கு நேர எல்லை கிடையாது. (ஒரு அரை மணி நேரத்தை சராசரியாகக் கொள்ளலாம் )

கவுன்சிலிங் தேவையா ? நாங்கள் வழங்குகிறோம்

Image
  உளவளத்துணை.  கவுன்சிலிங் என்றால் என்ன ?  Psychological Counseling Service from Jaffna.  கவுன்சிலிங் என்பது ஓரு மனிதன் வாழ்வின் ஒரு நிலையில் அகப் புறக் காரணிகளால் பாதிக்கப்பட்டு அடுத்த நிலைக்கு நகர முடியாது நிற்கும்போது அந்த மனிதன் அவனது முழுத்திறனையும், தகமையையும், அனுபவத்தையும், கிடைத்த வசதி வாய்ப்புக்களையும் அறிந்து அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி சிக்கலான நிலையிலிருந்து தானாகவே விடுபட, அவனில் அக்கறைப்பட்டு அந்த மனிதனை மதிப்போடும் மரியாதையோடும் நடத்தி – பொறுமையாக அவனுடன் உiரையாடி அவன், தன் வாழ்வை தானாகவே மேம்படுத்தக்கூடிய வகையில் உதவுவதே ஆகும். உங்கள் கவுன்சிலர் பற்றி: கவுன்சிலிங் துறையில் 20 வருடங்களிற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள உளவியலாளர். ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளராக பல நாடுகளில்(International Coach ) பல்லாயிரக்கணக்கானோரைப் பயிற்றுவித்த ஒருவர். இங்கிலாந்தின் உளவியல் முதலுதவிச் செயற்பாட்டுச் சான்றிதழ, கவுன்சிலிங் சைக்கோலஜியில் முன்னணி பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா, உளவியல் பட்டமேற்படிப்பு மற்றும் முதுமாணிப் பட்டம் ஆகியவற்றை பெற்ற உளவியல் ஆய்வாளர்.  உயர் கல்வித்துறை முதல் கணினித்துற