இளையோருக்கான இலவசப் பயிற்சி நெறிகள். - Youth empowerment in North.
சுயசிந்தனையும் நன்நெறிகளும் உள்ள மககளால் ஆன பொருளாதாரத்தன்னிறைவுள்ள மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குதல்.
15/16 இலிருந்து 24 வயதுவரை ஒரு மனிதன் புதியவிடயங்களை கற்றலுக்கான உச்சத்திறனைப் பெற்றிருக்கிறான். எதிர்கால வாழ்கைக்குத்தேவையான கல்வி,தொழில்திறன்,வாழ்திறன்கள் உட்பட்ட சகல திறன்களையும் வளது;துக்கொள்ளவேண்டிய வயது இதுவே. புhடசாலையில் எமது நாட்டில் உள்ள பாடமாக்கலை மட்டும் அடிப்படையாகக்கொண்ட சிந்தனைத்திறன்-படைப்பாற்றல் போன்வற்றை வளர்க்காத கல்வி அனைவருக்கும் பொருத்தமானது அல்ல. மாணவர்கள் பல்வேறுபட்ட தனித்திறமைகளை உடையவர்களாக இருப்பர்.
எல்லோராலும் ஏட்டுக்கல்வியை மனனம் செய்ய முடிவதில்லை. சிலர் ஓவியம் வரைவதில் திறமை உள்ளவர்களாக இருப்பர், சிலர் பாட்டுப்பாடுவதில் சிறந்திருப்பர். சிலர் புகைபடம் எடுத்தல்,, மற்றும் சிலர் புதிய பொருட்களை உருவாக்குதல், கவிதை புனைதல், கட்டுரை எழுதல், தொழில் முயற்சிகளைச் சிந்தித்தல் என பல்வேறு துறைகளில் இயல்பாகவே விருப்பமும் தனித்திறமையும் உடையவர்களாக இருப்பர். இவ்வாறான தனித்திறமைகளை ஊக்குவித்தால்தான் உலகம் வியக்கும் சிறந்த மனிதர்களை நமது நாட்டிலும் உருவாக்கலாம்.
திறமைகள் பலவகை. ஓரு ஆசிரியர் தனது வகுப்பில் உள்ள மாணவர்கள் அனைவரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்போல் பாடவேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு தூரம் முட்டாள்த்தனமானதோ அவ்வாறே அனைத்து மாணவர்களும் கணிதத்தில் சிறந்து விளங்கவேண்டும் என்று எதிர்பார்;ப்பதும் முட்டாள்த்தனமானது.
பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் சொல்கிறார் " மரத்தில் ஏறுவதுதான் திறமை என உலகம் சொன்னால் மீன் ஒன்று தான் ஒரு முழு முட்டாள் என்று எண்ணியபடியே வாழ்ந்து மறைந்துவிடும், ஒவ்வொருவரும் ஒவ்வொருவகையில் தனித்திறமை உள்ளவர்களே." குரங்கினால் மரமேற முடியும் ஆனால் மீனோடு போட்டியிட்டு நீந்த முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை உண்டு. அதை அறிந்து வளப்படுத்தினால் அவர்களது வாழ்வின் தரம் உயர்ந்துவிடும்.
என்.பி.ஆர்.ஐ ஆகிய எமது நிறுவனம் உளவியலாளர்கள்-புகைப்பட கலைஞர்கள்- சங்கீத விற்பன்னர்கள்-பொறியிலாளர்கள்-கண்டுபிடிப்பாளர்கள்-தொழிலதிபர்கள்-தொழில் முயற்சியாளர்கள் உட்படப் பல்துறை நிபுணர்களின் கூட்டமைப்பில் உருவானது . நாம் வளங்கும் பயிற்சிநெறிகள் மாணவர்களிற்கு வெறுப்புத்தாரத வகையிலும் அவர்கள் விருப்பத்திற்குரியதாகவும் மற்றும் முற்றிலும் இலவசமானதாகவும் இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
வாழ்வில் வெற்றிபெறவேண்டும் என்ற கனவுள்ள எவரும் எம்மை அணுகலாம். உண்மையும் நேர்மையும் உள்ள இளைய தலைமுறையினரை வளப்படுத்தவும் வழிகாட்டவும் நாம் தயாராக உள்ளோம். தயங்காது எம்முடன் பேசலாம் - அழையுங்ககள் - 075-2746452.
போட்டோகிறாபி, குறுந்திரைப்படம் சார்ந்த அனைத்துத்துறையும் - வீடியோ எடுத்தல் - எடிட் பண்ணுதல், தொழில்-வியாபார முயற்சிக்கான அடிப்படை கணினித்துறையில் 50 இற்கு மேற்பட்ட பயிற்சிகள் - இவை அனைத்தும் முற்றிலும் இலவசமாக மாணவர்களின் சிந்தனை-கற்றல்- திறன்களை மேம்படுத்தும் நோக்குடன் தேவையுடைய மாணவர்க்கு வழங்கப்படும்.
மிகக்குறுகிய காலப் பயிற்சி நெறிகள். உங்கள் பாடசாலைக் கல்வி நடவடிக்கையை பாதிக்காத வகையில் வகுப்புக்கள்.
Comments
Post a Comment