உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?
உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?
சைக்கோசிஸ் - நியூரோசிஸ்(Psychosis, Neurosis) என இரண்டு வகையில் பிரித்துப்பார்க்கப்டக்கூடிய மனநலம் சார்ந்த பிரச்சனைகளில், சைக்கோசிஸ் எனப்படுவதுதான் நாம் நிஜ உலகத்தைவிட்டு விலகி இருத்தல்- அல்லது சுய உணர்வின்றி நடந்துகொள்ளல் (யாதார்த்தமற்ற நிலை) இதை உலக வழக்கில் மக்கள் சொல்லும் சொற்களாகிய 'சித்தப்பிரமை' மற்றும் 'பைத்தியம்' ஆகிய சொற்களுடன் இணைத்துப்பார்க்க முடியும்.
இரண்டாவது வகையாகிய நியூரோசிஸ் எனப்படக்கூடிய மனநலப் பிரச்சனைகளின்போது (inner struggles, mental and physical disturbances) பாதிக்கப்ட்டவர் சுய உணர்வுடனும் குறிப்பிட்ட சில பிரச்சனைகளால் தான் பாதிக்கப்பட்டிருப்பதை பகுதியளவாவது உணர்ந்தும் இருப்பர். மனச்சோர்வு, மன அழுத்தம், உறக்கப்பிறழ்வுகள், உண்ணல் சார்ந்த பிரச்சனைகள்(அதிகம் உண்ணல், அதீத உணவு தவிர்த்தல்...), பயவுணர்வுகள், அதீத கோபம் உட்பட்ட திடீர் உணர்வு நிலை மாறல்கள் போன்ற சில இதற்கான உதாரணங்கள்.(Depression, stress, eating disorders, personality disorders, phobias, sudden mood swings -bipolar etc..)
உடல் நலத்தை தீர்மானிக்கும் காரணியாக மன நலமும் - மன நலத்தில் பாதிப்பு செலுத்தும் காரணியாக உடல் செயற்பாடுகளும் இணைந்து உள்ளதை ஒரு சமூகமாக-நாடாக நாம் புரிந்து கொண்டிருப்பது சற்றுக்குறைவுதான்.
நாட்பட்ட நியுரோசிஸ் பிரச்சினைகள் - சைக்கோசிஸாக உருவெடுக்கும் வாய்ப்புக்களும் உண்டு. ஒரு அனுபவமுள்ள உளவியல் ஆலோசகராலோ அல்லது பல சமயங்களில் வாழ்வியல் அனுபவமும் பக்குவமுமுள்ள நீங்கள் மதிக்கும் ஒரு பெரியவரால் கூட சில ஆலோசனைகள்- ஆறுதலான பேச்சு போன்றவற்றின் மூலம் இந்தப்பிரச்சினைகளில் இருந்து உங்களை விடுவிக்க முடியும்.
***சைக்கியாற்றிஸ்ட் என்பவர் முதலில் மருத்துவம் படித்து(MBBS/MD ) பின்னர் உளநலம் சார்த்த பிரிவில் விசேடத்துவம் பெற்ற வைத்தியராகும். உயிரியல்-உடலியல்(biological/physiological) சார்ந்து எழும் உளவியல் பிரச்சனைகளிற்கு இவரது உதவி அத்தியாவசியமானது, கிளினிக்கல் சைக்கோலஜிஸ்ட் என்பவர் உளம் செயற்படும் விதம் சார்ந்தும் - உளவியல் பிரச்சனைகள்-தீர்வுகளை வழங்கல் சார்ந்தும் படித்த ஒருவராகும். கவுன்சிலர் என்பவர்(Psychological counselor) - பல அடிப்படையான உளவியல் பிரச்சனைகளிற்கு தீர்வுகளை வழங்கும் அறிவுள்ளவராகும்.****
சைக்கோசிஸ் எனப்படும் நிலையில் நிச்சயமாக உளநல வைத்தியரின்( Psychiatrist) ஆலோசனையின் கீழ், மருந்து மாத்திரைகள், ஊசி போன்றவற்றின் மூலமாகவே சிகிச்சகைள் ஆரம்பிக்கப்படும். பூரண நலன் கிடைத்தல் துர்பலம்.
ஆனால் (அனுபவம் வாய்ந்த மருத்துவ உளவியலாளர்களின் கூற்றுப்படி) 95 வீதமான மனநலப்பிரச்சனைகள் மருந்து-வைத்தியர் தலையீடு இன்றி – ஆலோசனை மூலமாகவே (சிறிய வாழ்வியல் நடைமுறை மாற்றம், சிந்தனை மாற்றம்)குணப்படுத்தக்கூடியவை.( Talking therapy, CBT, EBT etc.)
உளவியல் சார்ந்த மருத்துவரைப் பார்த்தாலே பைத்தியம் என்று ஊரில் கதையைக் கட்டிவிடுவார்கள் என்பதாலேயே – டிப்பிரசன் போன்ற பூரணமாகக் குணப்படுத்தக்கூடிய பிரச்சனைகளுடனேயே மக்களில் பெரும்பாலானோர் வாழ்ந்து வருகிறார்கள்.
உளவள ஆலோசனை பெறுதல் என்பது மேலைநாடுகளில் எல்லாம் மிக மிக சாதாரண நடைமுறையாகும். மனம் சார்ந்த பிரச்சினைகள் இருப்பின் நேரடியாக உளநல வைத்தியரை நாடத்தேவையில்லை. உளவியலாளர்(Clinical Psychologist/ Counseling Psychologist) அல்லது கவுன்சிலர் ஒருவரை அணுகினாலோ 95 வீதமான பிரச்சனைகளிற்கு தீர்வு கிடைக்கும்.
( இது ஒரு விழிப்புணர்வுப் பதிவு - இதனை எனது தனிப்பட்ட வலைமனையிலும் பார்வையிடலாம் - manimarantalks.blogspot.com )
Counselling Unit,
Northern Psychological Research Organization,
Jaffna.
Email: nprijaffna@gmail.com
Facebook : Click Here
Key Words: Jaffna, Counseling, Tamil Psychological Counseling, mental health in Jaffna, mental health development in Jaffna., Free Counseling Services for Students from Jaffna. Northern Psychological Research Institute - Jaffna. Sri Lanka.
Comments
Post a Comment