Counseling

 உளவளத்துணை. 

கவுன்சிலிங் என்றால் என்ன ? 
Psychological Counseling Service from Jaffna. 



கவுன்சிலிங் என்பது ஓரு மனிதன் வாழ்வின் ஒரு நிலையில் அகப் புறக் காரணிகளால் பாதிக்கப்பட்டு அடுத்த நிலைக்கு நகர முடியாது நிற்கும்போது அந்த மனிதன் அவனது முழுத்திறனையும், தகமையையும், அனுபவத்தையும், கிடைத்த வசதி வாய்ப்புக்களையும் அறிந்து அவற்றை முழுமையாகப் பயன்படுத்தி சிக்கலான நிலையிலிருந்து தானாகவே விடுபட, அவனில் அக்கறைப்பட்டு அந்த மனிதனை மதிப்போடும் மரியாதையோடும் நடத்தி – பொறுமையாக அவனுடன் உiரையாடி அவன், தன் வாழ்வை தானாகவே மேம்படுத்தக்கூடிய வகையில் உதவுவதே ஆகும்.

உங்கள் கவுன்சிலர் பற்றி:

கவுன்சிலிங் துறையில் 20 வருடங்களிற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள உளவியலாளர்.

ஆளுமை மேம்பாட்டுப் பயிற்சியாளராக பல நாடுகளில்(International Coach ) பல்லாயிரக்கணக்கானோரைப் பயிற்றுவித்த ஒருவர்.

இங்கிலாந்தின் உளவியல் முதலுதவிச் செயற்பாட்டுச் சான்றிதழ, கவுன்சிலிங் சைக்கோலஜியில் முன்னணி பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா, உளவியல் பட்டமேற்படிப்பு மற்றும் முதுமாணிப் பட்டம் ஆகியவற்றை பெற்ற உளவியல் ஆய்வாளர். 

உயர் கல்வித்துறை முதல் கணினித்துறை வரை பல்துறையிலும் பணியாற்றியமையால் நீங்கள் எந்தப்பின்புலத்துடன் வந்தாலும் உங்களை உங்கள் தொழில் மற்றும் வாழும் சூழலை அடிப்படையாகக் கொண்டு இலகுவில் புரிந்து கொள்ளும் தன்மை உள்ளவர்.

ஒரு தசாப்த்தத்திற்கு மேலாக உளவியல் ஆய்வுச் செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் உளவியலை தொழிலுக்காகவன்றி – சுய தேடலிற்காக கற்று – அதையே பின்னர் தொழிலாக்கிய ஒருவர். 

நீங்கள் உலகின் எப்பாகத்திலிருந்தாலும் - இணையத்தின் ஊடாக எமது கவுன்சிலிங் சேவையைப் பெறலாம்.

உங்கள் பின்வரும் பிரச்சனைகள் சம்பந்தமான தீர்வுகள்- கவுன்சிலிங் ஊடாக வழங்கப்படுகிறது.

  • துஷ்பிரயோகத்திற்கு உள்ளானமை  - (உணர்வு ரீதியான, உடல் ரீதியான, பாலியல ரீதியான) மற்றவர் நையாண்டி செய்தலோ-உருவக்கேலிசெய்தலோ, உரிய மரியாதை வழங்கப்படாமையோ எதுவாயினும்.  
  • மனச்சோர்வு(Stress)
  • பதகளிப்பு (Anxiety)
  • மன அழுத்தம்(Depression)
  • ஒதுங்குதல் அல்லது தவிர்த்தல் மனப்பாங்கு(வேலைகளை கவனியாமை அல்லது தவிர்த்தல், மக்களை விட்டு விலகியிருத்தல், சில இடங்களை தவிர்த்தல் முதலியன..)
  • அன்பிற்குரியவர்களின் அல்லது உடைமைகளின் தற்காலிக அல்லது நிரந்தர இழப்பினால் ஏற்படும் தாங்க முடியாத சோகம், தனக்குள்ளேயே வேதனையைச்சுமந்து வருந்துதல் (குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக)
  • முடிவெடுத்தலில் பிரச்சனை/உதவி தேவைப்படுதல்(கல்வித்தெரிவு,தொழில் சார், வாழ்க்கை).
  • வாழ்வில் திடீரென்று ஒரு புள்ளியில் தேங்கிவிட்ட அல்லது அடுத்து என்ன செய்வதென்று புரியாது திகைத்து நிற்கும் நிலை.
  • பயங்கள்(மிருகங்கள்,நிகழ்வுகள்,பொருட்கள்..முதலிய பலவகையானவற்றிற்கும் பயம்)
  • காரணம் தெரியாது – ஆனால் வாழ்க்கையில் திடீரென சக்தி குறைவானதாக உணர்தல் ஒரு விடயத்தைச் செய்யய உத்வேகம் இன்மை.
  • வாழ்வில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்க உதவி தேவைப்படுதல் (உதவி வழங்கப்படும்)
  • எந்நேரமும் எரிச்சல் - கடுகடுப்பாக உணர்தல், செயற்படல்
  • சாப்பாடு சம்பந்தமான பிரச்சனைகள்(அதிகமாக உண்ணுதல்/மிகக் குறைவாக உண்ணுதல்)- உடல் எடை சம்பந்தமான கவலை.
  • தன்னம்பிக்கையின்மை, தன்னிடம் திறமைகள் இல்லை என்று எண்ணுதல், தன்னைப்பற்றி தாழ்வாக சிந்தித்தல்.
  • திறமை - தோற்றம் - உடலமைப்பு சம்பந்தமான கவலைகள்-சந்தேகங்கள்.
  • உறவு முறையில் பிரச்சனைகள்- தனிப்பட்டது அல்லது வேலையிடம் சார்ந்தது
  • தூக்கமின்மை 
  • தற்கொலை எண்ணங்கள்
  • மது போதைப்பழக்கங்களிலிருந்து மீள முடியாமை
  • வாழ்வில் மறக்க முடியாத பயங்கர நினைவுகள்-அனுபவங்கள் (அவற்றிலிருந்து மீளல்)

கட்டண விபரம் .

இலவ சேவை.

  • பாடசாலை மற்றும் உயர்கல்வி கற்கும் மாணவர்கள்.
  • பொருளாதார வசதியற்றோர்.
  • மற்றும் தொண்டு நிறுவனங்கள், சமூக சேவையாளர்களால் சிபாரிசு செய்யப்படும் நபர்கள்.
மேற்படி பிரிவினர் இலவசமாக எம்மிடம் உளவியல் சேவைகளைப் பெற முடியும். 

கட்டணச் சேவை.


இலங்கையில் வசிக்கும் இலங்கையர்களின் கட்டணமும் வெளிநாட்டவரது கட்டணங்களும் வேறுபட்டவை. nprijaffna@gmail.com என்ற முகவரிக்கு - உங்கள் அடிப்படை விபரங்களுடன் (இலங்கையராயின் உள்நாட்டுத்தொலைபேசி இலக்கத்துடன்) ஓரு ஈமெயிலை அனுப்பி கட்டண விபரங்களை பெறலாம்.

கவுன்சிலிங் நேர அளவுகள். 

ஓரு அமர்வு 40 நிமிடம் முதல் 1 மணிநேரம் வரை .  உங்கள் பிரச்சனைகள் பற்றி முதலில் கேட்டறிந்து சுமார் எத்தனை அமர்வுகள் தேவைப்படலாம் என்பது குறிப்பிடப்பட்டு கவுன்சிலிங் ஆரம்பிக்கப்படும்.

Zoom/Google Meet/WhatsApp/Viber போன்ற தொழில்நுட்பங்களில் ஒன்றின் மூலம் கவுன்சிலிங் வழங்கப்படும்.

நேரில் வர விரும்புவோர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள எமது அலுவலகத்திற்கு நேரில் வரலாம். முன் பதிவுடன் மாத்திரமே சந்திக்கலாம். முதலில் ஈமெயில் ஊடாகத்தொடர்பு கொள்ளுங்கள் பின்னர் உங்கள் தொலைபேசியூடாக நாம் தொடர்பு கொள்வோம்.

  • கவுன்சிலிங் அல்லது ரோக்கிங் தெரபி என்பது அனைவரிற்கும் வழங்கப்படக்கூடியது அல்ல
  • ஒருவரிற்கு கவுன்சிலிங் வழங்க உடன்படுவதும் மறுப்பதும் எமது பூரண முடிவிற்குட்பட்டது.
  • தேவையற்ற நேர விரையமான தொலைபேசி அழைப்புக்களைத் தவிர்க்கவே - முதலில் மினனஞ்சல் ஊடாகத்தொடர்பு கொள்ளும்படி கேட்கப்படுகிறது.

Counselling Unit,
Northern Psychological Research Organization,
Jaffna.

Facebook : Click Here 

Tags : Counselling in Jaffna, Counseling in Jaffna, Tamil Counseling, Jaffna Psychologists, Counsellors in Jaffna. Psychology helpline Jaffna. 

Comments

Popular posts from this blog

இளையோருக்கான இலவசப் பயிற்சி நெறிகள். - Youth empowerment in North.

உளநலப் பாதிப்பா ? யாரிடம் உதவி பெறுவது ?

போதைப்பொருள் பாவனையின் சடுதியான அதிகரிப்பும் - கற்றவர்களின் அசமந்தமும்.