Research Assistants Wanted in Jaffna (Students of Psychology)
Part-Time Volunteer Research Assistants
உளவியல் கற்கும் மாணவர்கள் ( சான்றிதழ்/டிப்ளோமா / பட்டப்படிப்பு எதுவாயினும்) அல்லது உளவியல் கற்றலில் ஆர்வமும் தேடலும் உள்ளவர்கள் - எம்முடன் இணைந்து உளவியல் ஆய்வுப்பணியில் தொண்டர்களாகப் பணியாற்ற தேவை. நாம் வழங்கும் வினாக்கொத்துக்களை பூர்த்தி செய்தல், மக்களுடன் நேர்முகம் களைச் செய்தல் மூலம் தகவல் திரட்டுதல் , எம்முடனான இணைய வழிக் கலந்துரையாடல் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகியன உங்கள் அடிப்படைப் பணியாகும். தொடர்ந்து கற்றலுக்கான செயற்பாடு இது. பகுதி நேரமாக , உங்கள் நேர வசதிப்படி மாதத்தில் ஒரு சில மணிநேரங்களை மட்டுமே ஒதுக்கி பணி புரியலாம். நீங்கள் உங்கள் இடத்தில் இருந்தே இணைய வழியில் எம்முடன் பணி புரியலாம்.
இது ஒரு கூட்டான கற்கும் முயற்சியாகும். உளவியல் கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களிற்கு தாம் கற்றவற்றை ஆய்வுகள் மூலம் நினைவு படுத்தவும் அவர்களது அடுத்த கட்ட கல்விக்கு ( Bachelor's/ Master's) தேவையான அடிப்படைகளைப் பெறவும், அந்தந்த துறையில் உள்ள தொழில் வாய்ப்புக்களை அறிந்து கொள்ளவும், தொழில் வழங்குனர்களோடு தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பாக இந்த செயற்பாடு அமையும்.
மேலதிக விபரங்களிற்கு உங்கள் தொலைபேசி இலக்கம் மற்றும் கல்வித்துறை பற்றிய சிறு குறிப்பை இந்த ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும். : nprijaffna@gmail.com நாங்கள் உங்களைத்தொடர்பு கொள்வோம்.
Counselling Unit,
Northern Psychological Research Organization,
Thellipalai, Jaffna. Tel: 0752746452
Email: nprijaffna@gmail.com
Facebook : Click Here
Comments
Post a Comment