இளையோருக்கான இலவசப் பயிற்சி நெறிகள். - Youth empowerment in North.
சுயசிந்தனையும் நன்நெறிகளும் உள்ள மககளால் ஆன பொருளாதாரத்தன்னிறைவுள்ள மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குதல். 15/16 இலிருந்து 24 வயதுவரை ஒரு மனிதன் புதியவிடயங்களை கற்றலுக்கான உச்சத்திறனைப் பெற்றிருக்கிறான். எதிர்கால வாழ்கைக்குத்தேவையான கல்வி,தொழில்திறன்,வாழ்திறன்கள் உட்பட்ட சகல திறன்களையும் வளது;துக்கொள்ளவேண்டிய வயது இதுவே. புhடசாலையில் எமது நாட்டில் உள்ள பாடமாக்கலை மட்டும் அடிப்படையாகக்கொண்ட சிந்தனைத்திறன்-படைப்பாற்றல் போன்வற்றை வளர்க்காத கல்வி அனைவருக்கும் பொருத்தமானது அல்ல. மாணவர்கள் பல்வேறுபட்ட தனித்திறமைகளை உடையவர்களாக இருப்பர். எல்லோராலும் ஏட்டுக்கல்வியை மனனம் செய்ய முடிவதில்லை. சிலர் ஓவியம் வரைவதில் திறமை உள்ளவர்களாக இருப்பர், சிலர் பாட்டுப்பாடுவதில் சிறந்திருப்பர். சிலர் புகைபடம் எடுத்தல்,, மற்றும் சிலர் புதிய பொருட்களை உருவாக்குதல், கவிதை புனைதல், கட்டுரை எழுதல், தொழில் முயற்சிகளைச் சிந்தித்தல் என பல்வேறு துறைகளில் இயல்பாகவே விருப்பமும் தனித்திறமையும் உடையவர்களாக இருப்பர். இவ்வாறான தனித்திறமைகளை ஊக்குவித்தால்தான் உலகம் வியக்கும் சிறந்த மனிதர்களை நமது நாட்டிலும் உருவாக்கலாம். திற