Posts

Showing posts from October, 2022

இளையோருக்கான இலவசப் பயிற்சி நெறிகள். - Youth empowerment in North.

Image
  சுயசிந்தனையும் நன்நெறிகளும் உள்ள மககளால் ஆன பொருளாதாரத்தன்னிறைவுள்ள மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்குதல். 15/16 இலிருந்து 24 வயதுவரை ஒரு மனிதன் புதியவிடயங்களை கற்றலுக்கான உச்சத்திறனைப் பெற்றிருக்கிறான். எதிர்கால வாழ்கைக்குத்தேவையான கல்வி,தொழில்திறன்,வாழ்திறன்கள் உட்பட்ட சகல திறன்களையும் வளது;துக்கொள்ளவேண்டிய வயது இதுவே. புhடசாலையில் எமது நாட்டில் உள்ள பாடமாக்கலை மட்டும் அடிப்படையாகக்கொண்ட சிந்தனைத்திறன்-படைப்பாற்றல் போன்வற்றை வளர்க்காத கல்வி அனைவருக்கும் பொருத்தமானது அல்ல. மாணவர்கள் பல்வேறுபட்ட தனித்திறமைகளை உடையவர்களாக இருப்பர்.  எல்லோராலும் ஏட்டுக்கல்வியை மனனம் செய்ய முடிவதில்லை. சிலர் ஓவியம் வரைவதில் திறமை உள்ளவர்களாக இருப்பர், சிலர் பாட்டுப்பாடுவதில் சிறந்திருப்பர். சிலர் புகைபடம் எடுத்தல்,, மற்றும் சிலர் புதிய பொருட்களை உருவாக்குதல், கவிதை புனைதல், கட்டுரை எழுதல், தொழில் முயற்சிகளைச் சிந்தித்தல் என பல்வேறு துறைகளில் இயல்பாகவே விருப்பமும் தனித்திறமையும் உடையவர்களாக இருப்பர். இவ்வாறான தனித்திறமைகளை ஊக்குவித்தால்தான் உலகம் வியக்கும் சிறந்த மனிதர்களை நமது நாட்டிலும் உருவாக்கலாம்.  திற

போதைப்பொருள் பாவனையின் சடுதியான அதிகரிப்பும் - கற்றவர்களின் அசமந்தமும்.

Image
  Illicit Drug Addiction And Abuse உயிர் ஆபத்தான மற்றும் குறுகிய காலத்திலேயே அடிமைநிலைக்கு அழைத்துச் செல்லக்கூடிய தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்கள் எனக்கொள்ளப்படும் கஞ்சா, ஐஸ்(Methamphetamine), ஹெரோயின், கொக்கெய்ன், என்பவற்றின் பாவனை வீதம் சுமார் 15 வயதிற்கும் 24 வயதிற்கும் இடைப்பட்ட இளையோரிடையே வடக்கில் அதிகரித்திருப்பதை புள்ளிவிபரங்கள் காட்டினும், பொது மக்கள் மத்தியில் அதிலும் நன்கு படித்த-பொருளாதார அடிப்படையில் மத்தியதர மற்றும் உயர்தர மக்கள் மத்தியில், சமூகம் எப்படிச் சென்றுகொண்டிருக்கிறது என்ற விழிப்புணர்வு மிகக்குறைவாக உள்ளமை சமூகச்செயற்பாட்டளர்களிற்கு ஆழ்ந்த கவலையளிக்கிறது..